நடக்குமா நம் நாட்டில்?

*நடக்குமா நம் நாட்டில்? :* லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குவது




எப்படி என்ற கேள்வி எல்லார் மனதிலும் உள்ளது. எப்போது ஒருவன் 10 ரூபாய் கூட


செலவில்லாமல் தேர்தலில் நின்று வெற்றி பெருகிறானோ, அப்போது தான் முடியும்.


காரணம், ஒரு அரசியல்வாதி எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., ஆவதற்கு, பல கோடி ரூபாய்


செலவு செய்கிறார்.


இப்பணத்தைப் போல பல மடங்கு சம்பாதித்தால் தான், அடுத்த தேர்தலில் நிற்பதற்கும்,


அதில் தோற்றாலும், ஜெயித்தாலும், அதற்கடுத்த தேர்தலில் நிற்பதற்கும் அவரால்


செலவு செய்ய முடியும். இதற்காக, அவர் ஊழல் புரிய ஆரம்பிக்கிறார்.


ஓட்டளிக்கும் பாமர மக்களோ தமக்கும், தம் குடும்பத்திற்கும் கிடைக்கும் பணத்தைக்


கொண்டு திருப்தி அடைந்து, தவறான, நேர்மையற்ற ஒருவனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


லஞ்சமும், ஊழலும் இல்லாமல், இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியமில்லை.


*இதை ஒழிக்கக் கடைபிடிக்க வேண்டிய **வழிகள்:*


* தேர்தல் நடக்கும்போது, எந்த ஒரு கட்சியும் ஆட்சியில் இருக்கக்கூடாது. கவர்னரோ


அல்லது அரசு தலைமைச் செயலரின் தலைமையிலோ தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


* அரசியல் கட்சிகள் இரண்டு தான் இந்திய அளவில் இருக்க வேண்டும்.


* கட்சித் தலைவன் என்ற பதவி, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றப்பட


வேண்டும்.


* அரசியல்வாதி என்பது முழுநேரத் தொழிலாகக் கொள்ளக்கூடாது. இதனால் அவன்


குடும்பமும், வாரிசும் அரசியலையே குடும்பத் தொழிலாகக் கொள்கின்றனர்.


* ஒருமுறை பதவி வகித்தவர், எக்காரணம் கொண்டும் மறுமுறை எந்தத் தேர்தலிலும்


போட்டியிடக் கூடாது. இதனால், வாரிசு அரசியல் உருவாகாது.


* ஓட்டுரிமைச் சீட்டு வைத்திருக்கும் பகுதிக்கு மட்டும் தான் போட்டியிட


முடியும். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு தொகுதியிலோ அல்லது தனக்குச் சம்பந்தம்


இல்லாத தொகுதியிலோ போட்டியிடக் கூடாது.


* ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும்


மாறக்கூடாது. மாறாக, அவர் பதவி துறக்கலாம்.


* ஒரு அரசியல்வாதி பதவிக் காலத்திற்குள் மரணமடைந்தால், அவர் எந்தக் கட்சியின்


சார்பில் வெற்றி பெற்றாரோ, அந்தக் கட்சி வேறொருவரை நியமித்துக் கொள்ளலாம்.


இடைத்தேர்தல் தேவையற்றது.


* ஒருவர், தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் கூடாது.


தேர்ந்தெடுக்கும் மக்களைக் கேலிக் கூத்தாக்கும் இந்த நடைமுறை அடியோடு நீக்கப்பட


வேண்டும்.


* வருடத்திற்கு இரண்டு முறை வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டவும், நிதி ஒதுக்கீடு


செய்யவும், எம்.பி.,க்கள் கூடினால் போதும். அதாவது, அரசியல்வாதிகளின் அதிகாரம்


குறைக்கப்பட்டு, வரைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


நிதி ஒதுக்கீடு செய்வதோடு, எம்.பி.,க்களின் வேலை முடிந்து விட்டது. இதற்குப்


பிறகு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி முடிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின்


முழுப் பொறுப்பில் விட வேண்டும். அரசியல் தலையீடு மற்றும் குறுக்கீடு கூடவே


கூடாது.


* ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,


டி.என்.பி.எஸ்.சி., குரூப்


1 மற்றும் குரூப் 2 அதிகாரிகளை மாற்ற வேண்டும். அவர்கள் செயல்பாடு சரியில்லை


என்று மக்கள் கருதினாலோ அல்லது அதிகாரி தவறு செய்தாலோ, அவர்களை பதவிநீக்கம்


செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளை, இடமாற்றம் என்ற


பெயரில் கண்துடைப்பு நாடகம் நடத்தக் கூடாது. ஊழல் செய்யும் அதிகாரிகளின் மொத்த


சொத்தும் நாட்டுடமையாக்கப்பட வேண்டும். மேலும், இந்த அதிகாரிகளுக்கு ஓய்வு


ஊதியம் நிறுத்தப்பட வேண்டும்.


* அரசு ஊழியர் சங்கம் என்ற அமைப்பு அறவே நீக்கப்பட வேண்டும். இதன் தலைவர்கள்


மற்றும் பிரதிநிதிகள் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குவதோடு, மேல்மட்டத்


தலைவர்களுடன், அதிகாரிகளை மிரட்டி ஊழல் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அப்பாவி


உறுப்பினர்கள், ஏமாந்து, செய்வதறியாது நிற்கின்றனர். பேச்சுத்திறமை உள்ளவர்


சங்கத்தைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்.


* நீதிமன்றங்களில் ஒவ்வொரு வழக்கிற்கும், அதன் தன்மைக்கேற்ற நுழைவுக் கட்டணம்


அதிகமாக வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிற்கும் இரண்டு அல்லது மூன்று


வாய்தாக்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது. வாய்தாவின் போது, நீதிமன்றத்தில்


ஆஜராகாதவருக்கு


அபராதம் வசூலிக்கலாம். 10 அல்லது 15 வருடங்களுக்கு இழுத்தடிக்கும் வழக்குகள்


அறவே ஒழிக்கப்பட வேண்டும்.


* தற்சமயம், நீதித்துறை, காவல் துறை, வருவாய்துறை போன்றவற்றில், ஊழலும், லஞ்சமும்


தலைவிரித்தாடுகிறது என்பது உண்மை. இந்தத் துறைகள் அனைத்தும் அரசியல் வாதியின்


கையில்  உள்ளது. இதை தடுக்க முடியாமல், அதிகாரி தானும் ஒரு பங்கு பெற்றுக் கொண்டு, ஓட்டளிக்கும் மக்களை ஏமாற்றுகிறார். தேர்தலில் வெற்றி பெற்றவரை, திரும்பப்


பெறும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


* அரசியல் கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.


இவையெல்லாம் சட்டபூர்வமா இருந்தால் தான் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்கும்.


ஊழல், லஞ்சம் குறையும். ஐந்துக்கும், பத்துக்கும் கையேந்திய அரசியல்வாதிகள், ஒரு


சில ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாக மாறுவது நிற்கும். நடக்குமா நம் நாட்டில்?


*- டி.வி.ராஜேந்திரன், முன்னாள் முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.*


**


*


---------------------------------------------------------------------------­--

   ____________________________________________